வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாளை, மெக்கா நகரில், 25 லட்சம் பேர், ஹஜ் புனிதப் பயணத்திற்காக கூட உள்ளதாக, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதியில், முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள், ஆண்டுதோறும், ஐந்து நாட்களுக்கு, இங்கு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை, நாளை துவங்கி, 14ல் முடிவடைகிறது. இதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சவுதியில் குவியத் துவங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும், 18 லட்சம் பேர், மெக்கா வந்தடைந்ததாக கூறப்படுகிறது. சவுதி – ஈரான் இடையே, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலும், நாளை துவங்கும் ஹஜ் புனித யாத்திரையில், 25 லட்சம் பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.






