உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், வாகன பிரசாரம் செய்யப்படுகிறது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின், ‘யங் இந்தியன்ஸ்’ சார்பில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், வாகன பிரசாரம் செய்யப்படுகிறது.
இதன் துவக்க விழா, கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. ‘டீன்’ அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்து, பேசியதாவது: நாடு முழுவதும், ஆண்டுக்கு, 5 லட்சத்துக்கும் அதிகமானோர், உடல் உறுப்பு இல்லாததால், உயிர் இழக்கின்றனர். இவர்களின் தேவைக் காகவே, உடல் உறுப்பு தானம் தேவைப்படுகிறது. மூளைச்சாவு அடைந்த வரிடம் இருந்து, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது.
இது தவிர, கண், தோல், எலும்பு ஆகியவை,உயிரிழந்தவர்களிடம் இருந்தும் தானமாக பெறப்படுகிறது. தேவைப்படுவது, தானம் செய்ய தேவையான விழிப்புணர்வு மட்டுமே. அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.