காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019 ஜூலை26-ம் தேதி முதல், ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தமிழ்நாடு தபால் வட்டம், காந்திஜியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையின் முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் காந்தி யாத்திரை சிறப்பு உறைகளும், சிறப்பு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்பட்டன.

 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், தபால்துறை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியன்று ஏழு வட்ட தபால்தலைகளின் வெளியீட்டோடு கொண்டாட்டங்கள் தொடங்கின. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், உலகெங்கிலும் சுமார் 25 நாடுகள் தபால்தலைகளை வெளியிட்டுள்ளன.

1896-முதல் 1946-வரை தமிழ்நாட்டிற்கு பலமுறை வருகை தந்த காந்திஜி, மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். அதில், 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை வந்தபோது, தமிழ்நாட்டில் அவரது முதல் அடிச்சுவடு பதிவானது.

 

அதன் ஒரு பகுதியாக, ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதிவரை தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அண்ணல் காந்தியடிகள் 1896-முதல் 1946-வரை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 இடங்களில், அவரை சிறப்பிக்கும் வகையில், காந்திஜி யாத்திரையின் இணைப்பு தாங்கிய சிறப்பு உறைகளும், சிறப்பு அஞ்சல் முத்திரையும் தமிழக அஞ்சல் துறை வட்டம் வெளியிட்டுள்ளது.

 

முதல் அஞ்சல் உறையை, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில், “தமிழ்நாட்டில் காந்திஜியின் முதல் அடிச்சுவடி” என்ற கருப்பொருளில் சென்னை காந்தி ஆய்வு மையத்தின் தலைவர் கே. மோகன் 26.07.2019 அன்று வெளியிட்டார்.

தரங்கம்பாடியில் துன்பத்தில் இன்பப் பகிர்வு , திருச்சிராப்பள்ளியில் மதநல்லிணக்கம், மதுரையில் எளிமையான ஆடை, கன்னியாகுமரியில் சமூக நல்லிணக்கம், ராஜபாளையத்தில் எளிமை மற்றும் சுதேசி இயக்கம், திருப்பூரில் காந்திஜியும் திருப்பூர் குமரனும், கோயம்புத்தூரில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, உதகமண்டலத்தில் தீண்டாமை ஒழிப்பு, சேலத்தில் பெண்ணிய மேம்பாடு நிறைவாக சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், “காந்தியடிகளின் ஆக்கபூர்வமான திட்டங்கள்” என்ற கருப்பொருளில், தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை இயக்குநர் ஜே. சாருகேசி 02.08.2019 வெளியிட்டார்.

 

காந்திஜி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பின் விற்பனை திருச்சியில் துவங்கியது. காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை ஒரு தொகுப்பின் விலை ரூ700 ஆகும்.

 

திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவு அலுவலர் ராஜேக்ஷிடம் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், மதன், தாமோதரன், சதீஷ், உட்பட பலர் பெற்றுக் கொண்டார்கள்.


Leave a Reply