மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டம்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கப்பட்டது

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை கடந்த 01.08.19 அன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு சார்பாக துவக்கப்பட்டது.

 

இத்திட்டம் 01.08.19 முதல் 15.08.19 வரை பல்வேறு இடங்களில் செயல்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் இரண்டாம் நிலையாக 02.08.19 முதல் 05.08.19 வரை கல்லூரி வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும். அதில் கடந்த நான்கு நாட்களாக கல்லூரியில் வகுப்பு அறைகளையும், ஆய்வகங்களையும், ஆடிட்டோரியத்தையும், விளையாட்டு மைதானத்தையும், நூலகத்தையும், கல்லூரி சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும், மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

இதனைத்தொடா்ந்து 05.08.19 நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் கண்ணாடி பாட்டில்களையும் அகற்றினர். புதர் போன்று மண்டிகிடந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

 

கல்லூரியில் உள்ள கலாம் கனவு பூங்கா, சுவாமி பசுமை பூங்கா, நம்மாழ்வார் மூலிகை தோட்டம் மற்றும் கொடி காத்த திருப்பூர் குமரன் நினைவு பூங்காவில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினர். பிறகு மரக்கன்றுகளையும் நடவு செய்தனர்.

முன்னதாக இத் திட்டத்தை தெற்கு சரகத்தை சார்ந்த உதவி காவல் ஆணையர் நவீன் குமாரும், சிக்கண்ணா கல்லூரி நடை பயிற்சியாளர் சங்க செயலர் கண்ணன் , பிரதிநிதி சிவா, ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த தூய்மை பணியில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் 130 மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கல்லூரி பேராசிரியர்கள் விநாயக மூர்த்தி, ராஜகோபால், ரபீத், ஹரேஷ்பாண்டியா,குருசந்திரன் என ஏராளமான பேராசிரியர்களும் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் புஷ்பலதா இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


Leave a Reply