போலீஸ் எனக்கூறி பலவந்தமாக மாணவியை காட்டுபகுதிக்கு இழுத்து சென்று அரங்கேற்றிய கொடூரம்

போலீஸ் எனக்கூறி என்.ஐ.டி கல்லூரி மாணவியை கடத்திச் செனறு பாலியல் பலாத்காரம் செய்த வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டியில் (தேசிய தொழில்நுட்பக்கழகம்) மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பெண் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னை கல்பாக்கத்தில் பணியாற்றும் தனது நண்பருடன் என்.ஐ.டி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

 

அப்போது, அவ்வழியாக வந்த வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன்னை போலீஸ் எனக்கூறி, அவர்களை அழைத்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அடித்து உதைத்து துரத்திவிட்டு, மாணவியை பலவந்தமாக என்.ஐ.டி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்ததுவாக்குடி போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் திருட்டு போன்ற பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பதுதெரியவந்துள்ளது. மேலும், கடத்தல் மற்றும் பாலியல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply