வேலூரில் 2 கன்டெய்னர் நிறைய பணம்.. லாரியின் கண்ணாடி நொறுங்கியது

இன்றைக்கு வேலுரில் தேர்தல். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நேற்று இந்த சோதனை அதி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணி அளவில் மைசூருவில் இருந்து சென்னை நோக்கி 2 கன்டெய்னர் லாரிகள் வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, தனியார் பஸ் ஒன்று படு ஸ்பீடாக வந்து கன்டெய்னர் லாரியை முந்தி சென்றது.

 

இதில் ஒரு கன்டெய்னர் லாரியின் கண்ணாடி நொறுங்கிவிட்டது. இதை பார்த்த கன்டெய்னர் லாரியின் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் கண்டக்டரும் கண்டெய்னர் லாரி டிரைவரை அசிங்கமாக பேசினார். மாறி மாறி வாக்குவாதம் நடந்தது. சிறிது நேரத்தில், கண்டெய்னர் லாரியில் இருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் கீழே இறங்கி பஸ் கண்டக்டரை தாக்கிவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஸ் பயணிகளும் போலீஸ்காரரை சமாரியாக தீட்டினர்.

 

சுங்கச்சாவடியில் இப்படி ஒரு கலாட்டா நடப்பதை கேள்விப்பட்டு, தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை சரி செய்ய முயன்றனர். அப்போது அந்த வழியாக சென்ற தேர்தல் பார்வையாளர், 2 கன்டெய்னர் லாரிகளில் என்ன இருக்கிறது? என்று டிரைவரிடம் கேட்டார்.

அதற்கு டிரைவர், 2 லாரியிலும் பல கோடி பணம் இருக்கு என்றனர். இதை கேட்டதும், அதிர்ந்த தேர்தல் பார்வையாளர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கலெக்டரும் இது சம்பந்தமான விசாரணை நடத்தினார். அப்போதுதான், மைசூரு ரிசர்வ் வங்கியில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரிகளில் பல கோடி ரூபாய் கொண்டு செல்வதாக சொன்னார்கள்.

 

அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கலெக்டர் சொல்லவும், உடன் வந்த போலீசாரும் அதனை காட்டினர். அதை சரிபார்த்த கலெக்டர் இரு கன்டெய்னர் லாரிகளையும் அனுப்பி வைத்தார். ஆனால் அதற்குள் கன்டெய்னர் லாரிகளில் பணம் இருக்கும் விஷயம் அந்த பகுதி முழுக்க பரவியதும், பொதுமக்கள் குவிய ஆரம்பித்தனர். பிறக போலீசார் அவர்களை அறிவுறுத்தி கலைந்து போக செய்தனர்.


Leave a Reply