சந்திரயான்-2 விண்கலம் 4வது புவி வட்டப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது

சந்திரயான்2 விண்கலம் 4வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

 

தற்போது, சந்திரயான்-2 விண்கலம் 4வது புவி வட்டப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.5 ஆம் சுற்றுவட்டப் பாதையை கடந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply