ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். அவர் செய்த மாற்றங்களில், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும், விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் காணவும், பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

அந்த நாட்டில் பெண்கள் வெளிநாடு செல்ல தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற வழிமுறை இருந்தது. ஆனால் தற்போது, சவூதி அரேபிய அரசாங்கம், 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் என்று அறிவித்துள்ளது.


Leave a Reply