--- --:--:-- --

உலக நாடுகளின் பொருளாதார பட்டியலில் இந்தியா 7 வது இடம்

Tamil_News_large_2334715

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இந்தச் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜூலை மாதம் 24ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.உலக வங்கி வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

உலகளாவிய சந்தை மதிப்பை (ஜிடிபி) அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது உலக வங்கி. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. 2.7 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் இந்தியா உலக பொருளாதார நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

 

இந்த பட்டியலில் 20.5 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2017ஆம் ஆண்டு ஜிடிபி கணக்கெடுப்பின்படி உருவாக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 6 வது இடத்தை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon