வேலூர் மக்களவை தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு

வேலூர் மக்களவை தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் நேற்று மனு அளித்தார். வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 850 வாக்குச்சாவடிகள் மட்டும்தான் பதற்றமானவை என மாநில தேர்தல் ஆணையர் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆனால், வேலூரில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாகத்தான் உள்ளது. எந்த நேரத்திலும் கலவரம் நடந்து தேர்தல் நின்றுவிடும் அளவிற்கு வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் தகவல்கள் வந்துள்ளது.அதனால், அவர் அறிவுறுத்தலின்பேரில், இதனை தடுக்க அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

வாக்குப்பதிவின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அரசு ஊழியர்களை மிரட்டியும் பணம் கொடுத்தும், பூத் சிலிப்களை பறித்துச் சென்றுள்ளனர். இதனால், 100 சதவீத பூத் சிலிப்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. பெல் போன்ற தனியார் தொழிற்சாலைகளுக்கு வரும் 5ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்.

 

வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள அதிகமானோர் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதால் உள்ளூர் விடுமுறை விட வேண்டும். தனியார் நிறுவன விடுமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் திமுக அவைத்தலைவர் முகமது சகி உடனிந்தார்.


Leave a Reply