அதான் ஓப்பனா சொல்லிவிட்டானே பிரேக் அப்ன்னு! கதறி அழும் சாக்ஷி

பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மீரா மிதுன் வெளியேறிய பின்னர் போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர். இருப்பினும் கவின், சாக்ஷி இடையே உள்ள காதல் சண்டை மட்டும் அடிக்கடி பூகம்பம் போல் வெடிக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே உள்ள உறவு விரிசல் அடைந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

அதைத்தொடர்ந்து இன்றைக்கு மொட்ட கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மனதில் இருக்கும் கேள்வியை எழுதி பாக்ஸில், பெயர் எழுதாமல் போட வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். அப்போது பேசிய லால்லியா வழக்கத்திற்கு மாறாக சாக்ஷியை தாக்கி பேசியதால் பாத்ரூமில் கதறி அழுதார்.தற்போது அதை தொடர்ந்து இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கதறி அழும் சாக்ஷியை ஹவுஸ் மேட்ஸ் சமாதானம் செய்துகொண்டு இருக்கின்றனர். அப்போது பேசிய ரேஷ்மா, ‘அதான் ஓப்பனா சொல்லிவிட்டானே பிரேக் அப்ன்னு, அப்புறம் அழுது கொண்டிருப்பதால் என்ன பயன்? ‘ என்றார். உடனே ஷெரின், ‘இதைப்பத்தியே நீ யோசித்து கொண்டிருந்தால் அது உன்னையே சாப்பிட்டுவிடும். எனவே அதிலிருந்து வெளியே வா’ என்றார்.

 

அதைத்தொடர்ந்து பேசிய ரேஷ்மா, ‘பிரேக் அப் உனக்கு மட்டும் ஆகுறது இல்லை எல்லாருக்கும் ஆகும். அவளுக்கும் ஒரு நாள் பிரேக் அப் ஆகும் என்று கூறிவிட்டு ‘நாளை முதல் புதுத்தினம்’ என்று அவருக்கு ஆறுதல் கூறுகின்றார். இதை எல்லாம் சாக்ஷி கேட்டு மறு வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Leave a Reply