--- --:--:-- --

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

9

டகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

மழைவெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிதல், தேவையான முன்னெச்சரிக்கை திட்டங்களை ஒருங்கிணைத்தல், நிறுவன அளவிலான ஏற்பாடுகள் மற்றும் அவசரகால உதவிகளுக்கான உபகரணங்கள்-ஆட்களைத் தயாராக வைத்திருப்பதை இவர்கள் உறுதி செய்வர். மாநகராட்சி ஆணையருடன் இணைந்துச் செயல்படும் இந்த அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் தங்கி களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon