நாடகம் பார்த்து கொண்டிருந்த தாய்! 7 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்

7 வயசு குழந்தையின் துணியெல்லாம் ரத்தம். டிராமா பார்க்கிற ஆசையில், பெற்ற குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளானது கூட தெரியாமல் இருந்திருக்கிறார் தாய் ஒருவர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

 

இந்நிலையில், இந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. 3 நாட்கள் நடக்கும் நாடகம் இது. 2 நாள் விடாமல் இந்த நாடகத்தை பார்த்த தாய், 3-வது நாடகத்தையும் பார்க்க ஆசைப்பட்டார்.அதற்காக, தூங்கிக் கொண்டிருந்த மகளை வீட்டு வாசலில் படுக்க வைத்து விட்டு நாடகம் பார்க்க போய்விட்டார்.

 

ஒரு மணி நேரம் கழித்து, அந்த குழந்தை அழுதுகொண்டே அம்மாவை தேடி நாடகம் பார்க்கும் இடத்துக்கு வந்தாள். என்ன ஏதென்று விசாரித்தால், அவள் துணியெல்லாம் ரத்தம் இருந்தை கண்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

 

உடனே குழந்தையை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் கொடுமை செய்துள்ளதாக சொன்னார்கள். இதையடுத்து முசிறி போலீஸ் ஸ்டேஷனில் தாய் புகார் அளித்துள்ளார். இதனிடையே குழந்தையின் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இப்போது அனுதிக்கப்பட்டு இருக்கிறாள்.


Leave a Reply