மேன் Vs வைல்ட் : கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி காட்டில் பயணம்

பியர் கிரில்ஸ் உடன் இணைந்து காட்டுக்குள்ளான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான தகவலை பியர் கிரில்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ்.

காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ், ”180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் மறுபக்கம் தெரிய போகிறது.

விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்திய வனப்பகுதிக்கு சென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். ஒருமுறை நேர்காணலில் பேசிய பிரதமர் மோடி, தான் தனியாக 5 நாட்கள் காட்டில் வசித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் இமயமலை பயணம் குறித்தும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.


Leave a Reply