இந்தாண்டு முதல் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
இந்நிலையில், முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்ததினமான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்