பிரபல நடிகை பிறந்தநாள்! கேக் மட்டும் 3.45 லட்சம்

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோன்ஸ் உடன் மியாமியில் உற்சாகமாக கொண்டாடினார். பிரியங்கா வெட்டிய அந்த கேக் தயாரித்தது அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் என்பது தான் சுவாரசியமான தகவலாக உள்ளது.ப்ரியங்கா சோப்ரா தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிவப்பு நிற உடை அணிந்து வந்தார்.

நிக் ஜோன்ஸின் உறவினர்களும் கலந்து கொண்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், சாக்கலேட் மற்றும் வெண்ணிலாவால் செய்யப்பட்ட அந்த சிவப்பு, தங்க நிற கேக்கின் விலை இந்திய மதிப்பு படி 3.45 லட்சம் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த கேக்கை தயாரிக்கும் பணியில், பிரியங்காவின் கணவரும், 27 வயதே ஆனவருமான நிக் ஜோன்ஸ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply