ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் பிரச்சனையா? விராட் கோலி மறுப்பு

ரோஹித் சர்மாவிற்கு தனக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக வெளியான தகவலை விராட் கோஹ்லி முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக இன்று கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது, ரோகித் சர்மா உடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த விராட், ‘நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வு அறையில் நிலவும் சூழல் மிகவும் முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால், நம்மால் நன்றாக விளையாடியிருக்க முடியாது.

ஒரு நபரை எனக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என்னுடைய முகத்திலும் நீங்கள் பார்க்கலாம். அது மிகவும் எளிமையான ஒரு விஷயம். நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நான் நம்புகிறேன். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை’ என்றார்.


Leave a Reply