இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையைக் கொலை செய்த நபர்!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையைக் கொலை செய்துள்ளார் நாராயண ரெட்டி எனும் நபர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓங்கோல் எனும் பகுதியில் வசித்து வருபவர் நாராயண ரெட்டி. இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். குடி அடிமையான இவரிடம் இருந்து அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்த அவர் ஒரு கட்டத்தில் குடிப்பதற்காக நிறுவனத்தில் மோசடி வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இதனால் அதை சமாளிப்பதற்காக தனது பெற்றோரின் பெயரில் 15 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துவிட்டு அவர்களைக் கொலை செய்துவிட்டு அந்தப் பணத்தை அபகரிக்க முயன்றுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் தாய், தந்தை இருவருக்கும் தூக்க மாத்திரைக் கலந்த மோரைக் குடிக்க கொடுத்துவிட்டு அவர்கள் மயங்கிய போது கழுத்து மற்றும் மணிக்கட்டு பகுதியினைக் கத்தியால் அறுத்துள்ளார்.

 

அதன்பின் மறுநாள் காலை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கள் பெற்றோரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டதாக நாடகமாடினார்.போலிஸ் விசாரணையில் நாராயண் ரெட்டிதான் கொலை செய்தார் என்பதைக் கண்டறிந்த போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply