இராமநாதபுரம் மாவட்ட தமுமுக., மமக., பொதுக்குழு கூட்டம் இன்று மாலை தனியார் மஹாலில் நடைபெற்றது

தமுமுக., மாநில பொதுச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பட்டாணி மீரான், பரக்கத்துல்லா, அப்துல்லா, ரைஸ் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கஸ்தூரி ரங்கன் குழுவின் புதிய கல்வி கொள்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் , கல்வி கொள்கையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேசினார். மமக மாநில துணை பொதுச் செயலாளர் முகமது கவுஸ், அமைப்பு செயலர் ஹூசைன் கனி, தமுமுக., மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் பேசினர்.


Leave a Reply