உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றச்சாட்டிய பெண் பணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் இறந்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் பாலாத்காரம் செய்ததாக அப்பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அப்பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் ஒரு உறவினருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். ஏற்கெனவே அப்பெண்ணின் தந்தை கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.