கோவையில் முதன்முறையாக அதிநவீன ரோபோ கருவி மூலம் கண் அறுவை சிகிச்சை

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவையில் முதன்முறையாக அதிநவீன ரோபோ கருவி மூலம் மிக விரைவாக கண் அறுவை சிகிச்சை செய்யும் கண் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் சிறு விவசாயிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் ஆகியோருக்கு மிக விரைவான கண் மருத்துவ சிகிச்சை சேவை அளிக்கும் விதமாக புதிய ஐ.வி.கேர் மருத்துவமனை எனும் பிரத்யேக கண் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதற்கான துவக்கவிழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் புதிய மையத்தை சென்னை விஜிபி குழுமங்களின் தலைவர் முனைவர் வி. ஜி சந்தோசம் துவக்கி வைத்தார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பாஸ்கர் இந்த மையத்தில் பார்வை குறைபாடு,கண்புரை நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான கண் பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்து விதமான கண் நோய்களுக்கான சிகிச்சைகளை அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் செய்யப்படுவதாகவும் மேலும் இதற்கென பிரத்யேக ரோபோடிக்ஸ் இயந்திரம் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரம் கோவை நகரில் முதன் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்று அதி நவீன உபகரணங்கள் மூலம் செய்யப்படும் சிகிச்சைகள் மிகக் குறைவான நேரங்களில் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். விழாவில் மருத்துவர் ஸ்ரீதேவி, பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் முதன்மை கண் மருத்துவர் டாக்டர் பரசுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply