பயணிகள் கண் முன்னே டிரைவர்கள் அடிதடி!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் குறித்த  நேரத்திற்கு பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில்  தனியார் பேருந்து ஓட்டுனரும்  அரசு பேருந்து ஓட்டுநரும்  சண்டையிட்டு கொண்ட காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.உக்கடத்தில் இருந்து எண் மூன்று கொண்ட தனியார் பேருந்து புறப்பட வேண்டிய நேரத்தில் 30 F என்ற அரசு பேருந்து புறப்பட்டுள்ளது.

 

இதனால் இரு ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏறட்டு  பொதுமக்கள் முன்னிலையில் இரு பேருந்து ஓட்டுநர்களும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து இருவரும் நடு பேருந்து நிலையத்தில் பொது மக்கள் முன்னிலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்டனர். இக்காட்சியை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் தனுஷ் காயமுற்றார். இச்சம்பவம் குறித்து உக்கடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஓட்டுநர்களே ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply