வெரைட்டியா மீன் சாப்பிடணுமா ? கோவைக்கு வாங்க !!!

கோவையில் மீன் உணவு பிரியர்களை அசத்திய கடல் மீன் உணவுத் திருவிழா. கோவையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் மீன் உணவு வகைகளின் சிறப்பு வகை கடல் மீன் உணவு திருவிழா அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் துவங்கியது. சுமார் 15 நாட்கள் நடைபெறும் இந்த பிரத்யேக கடல் மீன் உணவு திருவிழாவில்,ந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளுடன் மீன் வகை உணவுகள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.

இதில் 60 வகையான மீன்களில் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்காகவும், ருசித்து மகிழவும் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளரும், லீ மெரிடியன் ஹோட்டலின் தலைமை சமையல் கலை நிபுணருமான சக்திவேல் கூறுகையில், “வாழை இலையில் மடித்துத் தரப்படும் கறிமீன் பொரித்தது உள்ளிட்ட நெத்திலி, மீன்வறுவல், இறால் வறுவல், நண்டு உள்ளிட்ட பல உணவுகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சமைக்கப்பட உள்ளதாக கூறிய அவர், இந்த கடல் உணவு திருவிழாவில், வட இந்திய மாநிலமான டெல்லி, குஜராத், மேற்குவங்கம், பஞ்சாபி, மகாராஷ்டிரா, மற்றும் காஷ்மீர்.

 

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் உணவு வகைகள் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடனுக்குடன் செய்து பரிமாறுகிறோம். குறிப்பாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநில உணவு பிரியர்களுக்காக இந்த உணவுத் திருவிழாவை வருடம் ஒரு முறை நடத்தி வருகின்றோம்.

மீன் பிரியாணி, இறால் பிரியாணி, இறால் வறுவல், நண்டு வறுவல், சுறா புட்டு, பல்வேறு வகையான மீன் வறுவல்கள், மீன் குழம்பு வகைகள் என 60-க்கும் மேற்பட்ட பலவிதமான கடல் உணவு வகைகள் இந்த உணவுத் திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.

இந்த கடல் உணவு திருவிழாவில், நிலா இட்லி மீன் குழம்பு கடை, 20 – 20 ஸ்நேக்ஸ் பார், பிக்பாஸ் ஜுகல் பந்தி, சிந்தாதிரிப்பேட்டை தவா தோசை கடை, காசிமேடு பிரியாணி ஸ்டால், உக்கடம் மீன் வருவல் கடை,என அனைத்து வகை உணவு பிரியர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.


Leave a Reply