சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் : எடியூரப்பா

வரும் திங்கள்கிழமை சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்ததால், அவர் முதலமைச்சர் பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில், 105 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.

 

இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்ற ஆளு‌நர், அவருக்கு இன்று மாலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்றவுடன் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘நான் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு எனது மனமாரந்த நன்றியை தெரிவிக்கிறேன். வரும் திங்கள்கிழமை 29ஆம் தேதி சட்டப்பேரவையில் எனது பெரும்பான்மையை நான் நிரூபிப்பேன்.

 

அத்துடன் நான் அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.முதலில் விவசாயிகளுக்கு பிரதமரின் ‘கிஷான் திட்டம்’ மூலம் நிதியுதவி அளிக்கவுள்ளேன். அத்துடன் இதே விவசாயிகளுக்கு கூடுதலாக 2 தவணைகளில் 2ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு எடுத்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply