மும்பை, கோல்ஹாபூர் இடையே சேவையில் உள்ள மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2000 பயணிகளுடன் பத்லாப்பூர் மற்றும் வாங்கனிக்கு இடையே வெள்ளத்தில் சிக்கியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலமத்தில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 2000 பயணிகளை ஏற்றி சென்ற இந்த ரயில் பாதி வழியில் பழுதாகி வெள்ளத்திற்குள் சிக்கியுள்ளது.
இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளே சிக்கியுள்ளனர். இந்நிலையில் ரயில் சிக்கியுள்ள பகுதிக்கு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் நகர போலீசார் விரைந்துள்ளனர். 3 படகுகளில் பேரிடர் மீட்பு படையினரும் அந்த இடம் நோக்கி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.