மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மீன் விற்பனை!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் மீன் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவ மையமாக செயல்பட்டு வருகிறது. மீன் விற்பனை செய்யும் நபர் ஒருவர் மருத்துவமனையின் மேல்தளத்தில் மீன் எடுத்துச் சென்ற காட்சி வெளியானது.

 

நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் சாய்தளத்தில், மீன் வியாபரி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அங்கு அவர் மீன் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் வனிதா விளக்கமளித்துள்ளார்.

மேல்தளத்தில் உள்ள உணவகத்துக்கு மீன் கொண்டு செல்லப்பட்டதாகவும், மீன் கொண்டுவந்தவர் வியாபாரியும் இல்லை, அந்த மீன்கள் விற்பனைக்காவும் இல்லை என கூறியுள்ளார்.


Leave a Reply