ராணுவ வீரர் ஒரு பெண்ணை ஏமாற்றி கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம் பகுதியை சார்ந்தவர் ராக்கி .இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராக்கியை தேடி வந்தனர்.

 

ராக்கியின் செல்போன் பதிவை வைத்து கண்டுபிடித்ததில் அகில் என்பவரை காதலித்து வந்ததாக தெரியவந்தது. அகிலை தேடிய போது அவரது நண்பன் ஆதர்ஷ் சிக்கி கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ராக்கியை கொன்று அகில் வீட்டின் பின் புறத்தில் புதைத்ததாக கூறினார்.

 

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சில அதிர்ச்சியான தகவலும் வெளியானது.இராணுவ வீரரான அகில் ,ராக்கி உடன் மிக நெருக்கமாக பழகி வந்து உள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருந்தார்.ஆனால் ராக்கிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் முடித்து உள்ளது.

இது தெரிந்த ராக்கி அகிலிடன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சண்டை போட்டுள்ளார். பின்னர் அவர் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதனால் அகிலுக்கு கோபம் தலைக்கேறியது. இந்த பிரச்சனையை பற்றி பேச அகில் ஆம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு ராக்கியை வர சொன்னார்.

 

அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அகில் ராக்கியின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தனது தம்பியின் நண்பரான ஆதர்ஷ் உதவியுடன் வீட்டுக்கு பின் யாருக்கும் தெரியாமல் குழிதோண்டி புதைத்துவிட்டனர். பிறகு குழிக்கு மேல் செடிகளை நட்டு வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை நடத்திவிட்டு அகில் டெல்லிக்கு பணிக்கு சென்று விட்டார்.

புதைக்கப்பட்ட ராக்கியின் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அகிலை டெல்லியில் இருந்து கேரளாவிற்கு வரவைக்கும் வேலையில் போலீஸாரிடம் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply