10 நாட்கள் போதை ஊசி போட்டு துடிக்க துடிக்க கற்பழிக்கப்பட்ட பெண்

இளம் பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்து, போதை ஊசி போட்டு துடிக்க துடிக்க கற்பழிக்கப்பட்டும், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இந்தவிஷயத்தை தெரிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

 

அதன் பேரில் போலீசார் அக்கம் பக்கத்தினர் மற்றும் இளம் பெண்ணின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த நிஷுகுப்தா என்ற வாலிபர் பழகி ஊர் சுற்றியது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாயமான இளம்பெண் அப்பகுதியில் மீட்கப்பட்டார்.

 

அவர் உடல் முழுவதும் ரத்த காயங்கள், முகம் கழுத்துப் பகுதியில் கடிபட்ட அடையாளங்கள் இருந்தன. மேலும் அவரது கையில் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மயக்கமடையச் செய்து அவரை 10 நாட்களாக அடைத்து வைத்து கற்பழித்ததும் தெரிய வந்தது. அந்த இளம்பெண் அடித்து உதைத்து கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது அந்த இளம் பெண்ணின் மார்பகத்தில் கடிக்கப்பட்ட காயங்கள் இருந்ததைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் நிஷுகுப்தா தான் அவரை தொடர்ந்து பத்து நாட்களாக விடாமல் கற்பழித்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.

 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவத்தன்று நிஷுகுப்தா இளம்பெண்ணை சந்தித்து பேசிய போது அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இளம்பெண் மயங்கிய பிறகு அவரை அறையில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.


Leave a Reply