பள்ளி வேனும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்து ! 7 குழந்தைகள் படுகாயம்

வேதாரண்யம் அருகே பள்ளி வேனும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்தில் 7 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆதனூர் ஊராட்சி அண்டர்காட்டில் உள்ள சுவாமி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளிவேனும், அதே பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற ஆட்டோவும் நேருக்நேர் மோதிக் கொண்டன.

 

இதில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற ராகுல், கிஷோர், ஆதவன், கனிஷ்கா, தாரணி, ரஷீகா, ஆசிகா ஆகிய ஏழு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். ஆட்டோவின் முன்புறம் நசுங்கியதில் ஆட்டோ ஓட்டுனர் வைத்திலிங்கம் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். அனைவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

படுகாயமடைந்த கனிஷ்கா, ரஷீகா ஓட்டுனர் வைத்திலிங்கம் ஆகியோருக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், மற்றவர்கள் நாகை தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply