கோவை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கோ-கோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஏ.கே.ஆர் அகாடெமி பள்ளி அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை

Publish by: சஃபியுல்லா --- Photo :


கோவை சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கோவை வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு நடந்தது.

 

போட்டியில் 12, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் கோவை, கரூர், ஈரோடு, சூலூர், பல்லடம், பெருந்துறை, திருப்பூர் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள 13 பள்ளிகளை சேர்ந்த 49 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை ஏ.கே.ஆர் பள்ளி முதல்வர் மணிமலர் தொடக்கி வைத்தார்.

நாக் அவுட் முறையில் நடந்த இறுதி போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சூலூர் எம்.டி.என் பியூச்சர் பள்ளி அணி ஏ.கே.ஆர் பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது. அதேபோல் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சூலூர் எம்.டி.என் பியூச்சர் பள்ளி அணி வெள்ளாளர் வித்யாலயா பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது. 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஏ.கே.ஆர் பள்ளி அணி சூலூர் அனுகிரகா மந்திர் பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது.

 

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஏ.கே.ஆர் பள்ளி அணி காங்கேயம் விவேகானந்தா அகாடெமி பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது.அதேபோல், 12 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சூலூர் எம்.டி.என் பியூச்சர் பள்ளி அணி கோவை பப்ளிக் பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது. அதேபோல் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சூலூர் எம்.டி.என் பியூச்சர் பள்ளி அணி சாகர் இன்டர்நேஷனல் பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது.

17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஏ.கே.ஆர் பள்ளி அணி கரூர் செட்டிநாடு வித்யா மந்திர பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது. 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஏ.கே.ஆர் பள்ளி அணி கருமத்தம்பட்டி ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி அணியை வென்று முதலிடம் பெற்றது.பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஷிப் கோப்பையை ஏ.கே.ஆர் அகாடெமி பள்ளி அணிக்கும், மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் கோப்பையை சூலூர் எம்.டி.என் பியூச்சர் பள்ளி அணிக்கும் வழங்கினார்.

 

தொடர்ந்து மற்ற வயது பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையையும், மேலும் சிறந்த டிபெண்டர், சிறந்த சேசர் என் 40 மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் செய்து இருந்தார். முடிவில் ஏ.கே.ஆர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.


Leave a Reply