லாஸ்லியாவை உச்சி வெயிலில் கட்டி போட்டதால் கவினுக்கு எழுந்த கோவம்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது.பிக் பாஸ் 3யில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்தனர். அதாவது பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி என்று இரு அணிகளாக உள்ளனர். அதில் வழக்கம் போல் மீரா மற்றும் சேரன் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

 

ஆனால் மற்றொரு பக்கம் சாண்டியின் செய்த கலகலப்பான செயல் என்று நேற்றைய ஏபிசோட் சற்று குதூகலமாகவே சென்றது.இந்த நிலையில் அந்த டாஸ்க் இன்றும் தொடரப்பட்டது. அதில் நாட்டாமை கதாபாத்திரம் சேரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது கூடுதல் என்னவோ தெரியவில்லை சேரன் சக போட்டியாளர்கள் மீது இருந்த கோபத்தை சமயம் பார்த்து நன்றாக பழி தீர்த்து கொள்கிறார்.

அந்த வகையில் நேற்று அவரிடம் சிக்கி கொண்டது மீரா மிதுன். அவரை தொடர்ந்து அவரின் பிடியில் யார் சிக்கியுள்ளார் என்பதே மூன்றாவதில் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.அதில், விளையாட்டுப் பிள்ளையாக வலம் வரும் லாஸ்லியா, சேரனின் நாட்டாமை சொம்பைத் திருடுகிறார்.

 

இதனால் அவருக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சேரன் அவரை உச்சிவெயிலில் நாற்காலியில் கட்டிப்போடுகிறார். இதை பார்த்த நம்ப பிளே பாய் கவின், லாஸ்லியா மீதுள்ள காதலால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது.


Leave a Reply