அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக் வாட்டர் பாட்டில் வழங்கிய விஜய் ரசிகர் மன்றத்தினர்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்ட தலைமை மாணவரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாவதையொட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக் வாட்டர் பாட்டில் வழங்கினார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தில் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகிறது இதை முன்னிட்டு கோவை மாவட்ட தலைமை மாணவரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவரணி தலைவர் பாபு தலைமையில் சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தகம் ,ஸ்கூல் பேக் ,வாட்டர் பாட்டில் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை வலுதூக்கும் சங்கம் சார்பில் gold medal மெகராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பூ மார்க்கெட் கார்த்தி,தேன்குமார், ரியாஸ்,செல்வம்,செந்தில்,கிரேஷ் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply