திருவாடானை தாலுகா நம்புதாளையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா

ராமநாதபுரம் மாவட்ம, திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பில் இருக்கும் ஸ்ரீ காளசித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய ஆடி உற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு இளைஞர்களால் வடமாடு எருது கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 15க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டார்கள்.

இந்த விளையாட்டானது காளை ஒரு 20 அடி தூரம் செல்லக்கூடிய கணமாக கயற்றில் கட்டப்பட்டிருக்கும் காளையை அடக்க ஒரு 8 வீர்ர்கள் இறங்குவார்கள் 30 நிமிடத்திற்குள் காளையை அடக்கினால் வீர்ர்கள் வெற்றிபெறுவார்கள் அடக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற காளைக்கும் காளையர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் தங்கம், வெள்ளி மற்றும் கட்டில், பீரோ பரிசுகளாக வழங்கப்படும்.

 

இந்த வடமாடு எருதுவிடும் விழாவில் ஆயரக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தார்கள். மாலை 6.00 மணிவரை நடைபெற்றது.திருவாடானை தாலுகா நம்புதாளையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ஏராளமான காளைகள், காளையர்கள் கலந்துகொண்டார்கள் வெற்றி பெற்ற காளைக்கும் வீர்ர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


Leave a Reply