பட்ட பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரிவாள் சண்டை!

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கி கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர். பெரம்பூர் – திருவேற்காடு இடையே இயக்கப்படும் மாநகர பேருந்தில் பயணம் செய்யும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல யார் என்பது தொடர்பாக பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

 

அரும்பாக்கம் அருகே சென்ற 29 E வழித்தடம் கொண்ட பேருந்தில் மீண்டும் ரூட்டு தல பிரச்னை தலை தூக்கியுள்ளது.அப்போது மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால், பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடிய மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டாகத்தியால் தாக்கி கொண்டனர்.

 

இதில்,பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவர்கள் பட்டா கத்தியுடன் சண்டையிட்டுக் கொண்டதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.


Leave a Reply