நளினி பரோலில் இன்று வெளிவர வாய்ப்பு!

Publish by: --- Photo :


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி இன்று பரோலில் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, தன்னுடைய மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கின் விசாரணைக்குப் பிறகு நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பரோலில் நளினியை அனுப்பும் விதிகளை சிறைத்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் நளினி இன்று பரோலில் வர வாய்ப்பு இருக்கிறது. பரோலில் வெளிவரும் நளினி வேலூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தங்க இருக்கிறார்.அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம்அளித்துள்ளனர்.

 

அதேபோல நளினி பரோலில் இருக்கும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது. ஊடகத்துக்கு பேட்டி அளிக்கக்கூடாது என சிறைத்துறை கட்டுப்பாட்டு விதித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைவைக்க இருப்பதாகவும் நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Leave a Reply