அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதன் ஒரு பகுதியாக அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்குவது,  வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Leave a Reply