26 வகை மருந்துகள் தரமற்றவை!தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

Publish by: --- Photo :


நாட்டில் தற்போது விற்பனையில் இருக்கின்ற 26 வகையிலான மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்கப்படும் மருந்துகள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வில்‌, பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டு தரமற்றவை எவை என அறிவிக்கப்படும்.

அதன்படி, ஜூன் ‌மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 26‌ மருந்துகள் தரமற்றவை எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 843 மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அதில் 817 மருத்துகள் மட்டுமே தரமானவை ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழகத்திலுள்ள ஓர் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த மருந்தும் அடக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Leave a Reply