திருவாடானை அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது!அவரிடமிருந்து டூவீலர் பறிமுதல்!!

திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியை அடுத்த KVR நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் செந்தில்பாண்டி வயது – 38. இவர் தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் தங்கி தனது டூவீலரில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

 

சம்பவத்தன்று செந்தில்பாண்டி ஜவுளி வியாபாரத்திற்கு சென்று விட்டு திருவாடானை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பேக்கரி முன்பு தனது டூவீலரை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து செந்தில்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருவாடானை அருகே கூகுடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து அவர் திருடிய டூவீலரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply