இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் குடிமராமத்து திட்ட பணி எக்ககுடி கண்மாய் புனரமைப்பு ஆட்சியர் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் எக்ககுடி கண்மாய் முதல்வரின் குடிமராமத்து திட்டப் பணி எக்ககுடி கண்மாய் புனரமைப்பு செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வு. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் எக்ககுடி கண்மாய் விவசாய பாசனதாரர் நலச்சங்கபிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணியை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

 

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் எக்ககுடி கண்மாய் புரைமைப்பு பணி மேற்கொள்ப்பட்டுள்ள இக்கண்மாயின் மூலம் 104.41 எக்டேர் நிலம் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர்.ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கீழ்வைகை வடிநில கோட்டம் பரமக்குடி கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்கள், குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண்மாய்களின் கரை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல்,நீர் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல்,புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இப்புனரமைப்பு பணிகள் சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகை, 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.

குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவிக்கும் வகையில் முதல் பரிசு ரூ.10 லட்சம், 2, 3ஆம் பரிசு. தலா ரூ.5 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், ஆனந்த்பாபுஜி உள்ளிட்ட அலுவலர்கள், எக்ககுடி கண்மாய் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.


Leave a Reply