நடிகர் சந்தானம் நடித்துள்ள A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரிக்கை

பிராமண சமுதாய பெண்களை இழிவு படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரி பிராமணர்கள் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சமீபத்தில் A 1 என்ற திரைப்படம் நடிகர் சந்தானம் மற்றும் ஜான்சன் தயாரிப்பில் ராஜ்நாராயணன் அவர்களின் குழுவினரால் எடுக்கப்பட்டது.

இத்திரைப்படம் வரும் 26 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் முட்டை சாப்பிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அக்ரஹார மாமி,மயங்கி விழுந்த மாமியின் தோப்பானார் என்று இதுபோல் பிராமணர் பெண்களை காதல் என்ற பெயரில் இழிவாகவும்,பிராமணர்களை கொச்சைப்படுத்தியும்,ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தடை செய்ய கோரியும்,பட தயாரிப்பு குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா அவர்களிடம் அகில பாரத பிராமணர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

 

இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி உலக அளவில் மிக பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply