தன் காதலியை நாமிநேட் செய்த கவின்!

Publish by: --- Photo :


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றது. பிக்பாஸ் 3 தொடங்கி நான்கு வாரம் கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

 

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும். அதில் கடந்த வாரம் நாமினேட் ஆன சரவணன், சேரன், அபிராமி, மீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் புதிதாக இதில் கவின் மற்றும் சாக்ஷி நாமினேட் ஆகியுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் கடந்த வாரம் முழுக்க நடந்த முக்கோண காதல் சர்ச்சையே. இதில் கவின் முதல் முறையாக தான் உருகி உருகிக் காதலித்த சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் இது தான் உங்க உண்மையான காதலா? என்று கலாய்த்துள்ளனர்.


Leave a Reply