விமானத்தின் றெக்கையில் ஏறிய வாலிபர்! அந்த மர்ம நபர் யார்?

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் விமான நிலையத்தில் புறப்பட இருந்த விமானத்தின் றெக்கையில் ஒரு வாலிபர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நைஜீரியாவில் லாகோஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு அஸ்மான் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 19ம் தேதி ஒடுபாதையில் புறப்பட தயாராக இருந்தது.

 

அப்போது திடீரென விமானத்தின் மேற்பகுதியில் மர்ம நபர் ஏறி விமானத்திற்குள் நுழைய முயன்றார். அவரை கண்ட பயணிகள் அவர் தீவிரவாதியாக இருப்பாரோ எனக்கருதி அதிர்ச்சி அடைந்தனர். எனவே, விமானத்தின் இன்ஜினை அணைத்து இதுபற்றி விமானி விமான நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

 

அவர்கள் விரைந்து வந்து அந்த மர்ம நபரை கைது அங்கிருந்து இழுத்து என்றனர். அவர் யார்? ஏன் எப்படி செய்தார் என்பது பற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த மர்ம நபர் விமானத்தின் மேல் பகுதியில் ஏறியதை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் சிறிதுநேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply