இரு சிறுமியை உறவினரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்! 8 பேர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த 2 சிறுமிகளை அவர்களின் உறவினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரமதேசம் கிராமத்தில் 7 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் அவர்களின் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தனர். 3 வருடங்களுக்கு முன்பு அவர்களின் தந்தையும் ,தாயும் கருத்து வேற்பாட்டால் பிரிந்து விட தாய் புதுச்சேரியில் பணிபுரிய சென்றுவிட்டார்.

 

எனவே, தனது 2 பெண் குழந்தைகளையும் தனது தாய் விட்டில் விட்டு சென்றுவிட்டார். மேலும், புதுச்சேரியில் தன்னுடன் பணிபுரிந்து வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.இதனிடையே சிறுமிகள் பெற்றோர் பராமரிப்பின்றி வாழ்வதை தெரிந்த உறவினர்களில் சிலர் சிறுமிகளை அவ்வப்போது வெளியே அழைத்து சென்று பிஸ்கட் போன்ற திண்பண்டங்களை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது சமீபத்தில் குழந்தைகளின் தாய்க்கு தெரியவந்ததால், அவர்களை தன்னுடன் புதுச்சேரிக்கு அழைத்து சென்றுவிட்டார்.ஆனால், புதுச்சேரியில் பள்ளி ஆசிரியைகள் சிறுமிகள் மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமிகள் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அதோடு, விழுப்புரம் போலீசார் உதவியுடன் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவருக்கும் வயது 27ல் இருந்து 35 வரை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply