இராமநாதபுரம் மாவட்டத்தில் முதியவரை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் . இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி, கடந்த 06.3 2015 ல் கழிப்பறை சென்றார். அப்போது, எதிர் வீட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராஜ்குமாரின் தந்தை கருப்பையா (60) தகராறை விலக்கினார்.

 

இதில் ஆவேசமடைந்த ரவிச்சந்திரன், கருப்பையாவை 7.3. 2015 ஆம் தேதி கீழே தள்ளி கழுத்து பின்புறத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்றார். இது தொடர்பாக கருப்பையாவின் மருமகள் ரேவதி புகாரின் அடிப்படையிச் ரவிச்சந்திரனை, எஸ்.பி.பட்டினம் போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இறுதி விசாரணைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபி, ரவிச்சந்திரனுக்கு (49) ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Leave a Reply