நடிகர் ஆர்யா தன் காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லல!

Publish by: --- Photo :


நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர். இவருக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் பார்க்கபட்டது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் வந்த பெண்களில் யாரையுமே திருமணம் செய்யவில்லை.

 

இவர் சமீபத்தில் சயிஷாவை திருமணம் செய்து கொண்டார். “காப்பான்” படத்தில் நடிகர் ஆர்யாவும் சாயிஷாவும் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே ஆர்யாவும் ,சாயிஷாவும் காதலித்து வந்தார்களாம். இது படக்குழுவினருக்கே தெரியாதாம்.

 

இந்நிலையில் நேற்று காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்வில் ஆர்யா திருமணம் பற்றி பேசினார்.அதில் அவர், நான் முதலில் சாயிஷாவிடம் காதலை சொல்லவில்லை.சாயிஷாவின் அம்மாவிடம் தான் சாயிஷாவை காதலிப்பதாக கூறினேன் என்று கூறியுள்ளார்.அதற்காக காரணம் என்னவென்றால் நான் பல முறை பெண்களிடம் காதலை நேரடியாக கூறி அது நிறைவேறாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.


Leave a Reply