இரண்டு சக்கர வாகனத்தை திருடியவன் கைது

Publish by: ஆனந்த் --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானைக்கு திருப்பூர், kvRB நகர், 3வது தெருவைச் சேந்த குருசாமி மகன் செந்தில் பாண்டி (38) கடந்த 21ம் தேதி சொந்த வேலை காரணமாக வந்து பாரத ஸ்டேட் வங்கி அருகே தனியார் பேக்கரியில் டீ குடித்து விட்டு வந்து பார்த்த போது தனது இரண்டு சக்கர வாகனம் திருடு போன விவரம் தெரிய வந்தது.

 

உடன் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரித்து காவல் நிலையத்தார் திருவாடானை அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமார் மகன் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வாகனத்தை கைப்பற்றி விசாரிந்து வருகிறார்கள்.