நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அரிமா சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கே.ஆர்.புரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கோவையில் கே.ஆர்.புரம் அரிமா சங்கத்தின் 2019-20 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை கோ-இண்டியா அரங்கில் நடைபெற்றது.

இதில் தலைவராக சுகுமார்,செயலாளராக சிறந்த சமூக சேவகர் விருதை பெற்ற சரவணன், மற்றும் கதிரவனும், பொருளாளராக கனகராஜ் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.விழாவில் முன்னாள் அரிமா சங்க கவர்னர் டாக்டர் பழனிசாமி சிறப்புரையாற்றி அனைவருக்கும் பதவி பிரமாணங்கள் செய்து வைத்தார்.

தொடர்ந்து கே.ஆர்.புரம் அரிமா சங்கத்தின் சார்பாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கல்வி உதவி தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் இரத்ததான வங்கிக்கு ரூபாய் 50,000 நிதியும் வழங்கப்பட்டது.

பின்னர்,அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அரிமா சங்கத்தின் சமூக சேவைகள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் விரிவு படுத்த உள்ளதாகவும் குறிப்பாக நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி நீர் வளத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள குளங்களை தூர் வாரும் பணியில் அரிமா சங்கம் ஈடுபடும் என தெரிவித்தனர்.


Leave a Reply