பிரபல முத்துவிலாஸ் ஸ்வீட்ஸ் உரிமையாளர் மீது கோவையில் மோசடி புகார்

முத்து லேண்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.தங்கநகை சீட்டு,சிட்பண்ட்,நிலச்சீட்டு உள்ளிட்ட பிரிவுகளில் தங்களை மோசடி செய்ததாக கூறி, நூறுக்கும் மேற்பட்டோர் கோவை மாநகர பொருளாதார குற்றபிரிவு போலிசில் புகார் அளித்துள்ளனர்.

 

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் தமிழக விவசாயிகள் சங்க சம்மேளன தலைவர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமாக முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் முத்து சிட் பண்ட், முத்து நகைசீட்டு பிரிவுகளில் நிதி நிறுவனம் 8வருடமாக இயங்கி வருகிறது. பிரம்மாண்ட விளம்பரங்கள் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் இந்த நிறுவனத்தில், தங்கநகை சீட்டு, மாத சீட்டு மற்றும் நில சீட்டு என அனைத்திலும் பணம் கட்டி வந்துள்ளனர்.

இதில் மாத சீட்டு மூலம் மாதம் ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு சீட்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் பணம் திரும்பக் கொடுக்கும் பொழுது 32000 ஆக வட்டியுடன் சேர்த்து தருவதாக நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதேபோன்று நில சீட்டு,நகை சீட்டு என இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் தங்களது தங்களது பெயரில் முதலீடு செய்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில் முதலீடு செய்து இரண்டு வருடம் முடிந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தர வேண்டிய தொகை சரியான முறையில் வழங்கவில்லை, நிலம் சரியாக பத்திரபதிவு செய்து தரவில்லை,நகைக்காக செலுத்திய முதலீட்டுக்கு உரிய பதில் இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வாடிக்கையாளர்கள் கூறிவந்தனர்.

இதேபோன்று இந்த நிறுவனத்தில் வழங்கப்பட்ட காசோலைகள், வங்கியில் திருப்பி அனுப்பபட்டதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.மேலும், ஊழியர்களை சிறைபிடித்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.பின், போலீசார் சமாதான படுத்தி அனுப்பிய நிலையில் தற்போது நூறுக்கும் மேற்பட்டோர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்க வந்துள்ளனர்.

பல கோடி ரூபாய் மோசடி செய்த உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்ய வேண்டும். தங்களது பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்,அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்களையும் கையோடு அழைத்து வந்து கமிஷனர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சுமித்சரனை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.


Leave a Reply