கோவையில் நடைபெற்ற கீரை கண்காட்சி

கோவையில் நடைபெற்ற கீரை கண்காட்சியில் 100 வகையான நாட்டு வகை கீரைகளை காட்சி படுத்தியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஆடை, அணிகலன், புத்தகம், உணவு என பல்வேறு துறைகளில் கண்காட்சிகள் நடந்து வரும் நிலையில் கோவையில் கீரை வகைகளுக்கென பிரத்யேக கண்காட்சி கோவையில் நடைபெற்றது.

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள கீரை கடை டாட் காம் எனும் வளாகத்தில் துவங்கப்பட்ட இதில் 100 வகையான கீரை வகைகளை காட்சிபடுத்தி உள்ளனர்.இதில் ஒவ்வொரு கீரைகளின் பயன்கள் மற்றும் அதன் மூலிகை குணங்கள் குறித்த விளக்கங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இக்கண்காட்சி குறித்து, கீரையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இணையதளத்தை துவக்கியுள்ள, மதுரையை சேர்ந்த ஸ்ரீராம் பிராசாத் பேசுகையில்,கீரைக்கடை.காம் எனும் இணையத்தளத்தின் பெயரிலேயே கோவை சாய்பாபா காலனி பகுதியில் கீரைகளுக்கென பிரத்யேக கடையை நடத்தி வருவதாகவும், இந்த கீரை கண்காட்சியில் 100 வகையான நாட்டு கீரைகளை காட்சி படுத்தி உள்ளதாகவும், இதன் நோக்கம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரின் மத்தியில் கீரைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


Leave a Reply