தமிழகத்தில் முதன் முறையாக பெட்ரோல் பங்கில் முற்றிலும் கணிணி மயமான வாடிக்கையாளர் தகவல் மையம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கோவையில் பெட்ரோல் விலை மற்றும் அது குறித்த அனைத்து தகவல்கள் குறித்த டிஜிட்டல் தொழில்நுட்ப திரை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் மற்றும் லக்கி ஸ்டார் இணைந்து இனிய சனிக்கிழமை முகாம்” எனும் தலைப்பில் புருக்பீல்ட்ஸ் எதிரில் உள்ள லக்கி ஸ்டார் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.

 

இதில் தமிழகத்தில் முதன் முறையாக ” முற்றிலும் கணிணி மயமான வாடிக்கையாளர் தகவல் மையம் துவங்கப்பட்டது.இந்த மையத்தை இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் கோவை மண்டல தலைமை பிரிவு விற்பனை மேலாளார் லேகா ராஜ் மீனா துவக்கி வைத்தார். இந்த மையத்தில் தற்போதைய பெட்ரோல் விலை நிலவரம்,பெட்ரோலின் வெப்பநிலை மற்றும் அது குறித்த கூடுதல் தகவல்கள் என அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து லக்கி ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் சேதுராமன் பேசுகையில் பிளாஸ்டிக் பயன்பாடை குறைக்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இந்த மையத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.இது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.

இவ்விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச இரத்த அழுத்த சோதனை செய்யப்பட்டு இலவச பிளிட்கார்ட் வழங்குதல் மற்றும் இலவசஆயில் மாற்றும் முகாம் ஆகியவை நடைபெற்றது.விழாவில் இந்தியன் ஆயில் நிறுவன அலுவலர்கள் ஜெயக்குமார் ,பிரசாந்த் மற்றும் பிலிட் கார்ட் ஸ்ரீநாத் ,லக்கி ஸ்டார் பங்குதாரர்கள் மற்றும் இந்தியின் ஆயில் டீலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply